சபரிமலையில் நமது சங்க தொண்டர்களின் ஸ்ட்ரெச்சர் சேவை

சன்னிதானம் , புல்மேடு மற்றும் பம்பா ஆகிய இடங்களில் நமது தொண்டர்கள் மிக சிறப்பான முறையில் செயல்பட்டனர் . மருத்துவ உதவி தேவைப்படும் பக்தர்களை புல்மேடு பாதையிருந்து சன்னிதானதில் உள்ள மருத்துவமனையிலும் , சன்னிதானம்,சரங்கொத்தி , மரக்கூட்டம் மற்றும் அப்பாச்சிமேடு உள்ள பக்தர்களை பம்பா மருத்துவமனையிலும் சேர்த்து மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். சபரிமலையில் மரணமடைந்த பக்தர்களின் பூத உடலை தங்கள் தோள்களில் சுமந்து வந்து நமது சங்க வாயிலாக அவர்களது இல்லத்தில் சேர்க்கின்றனர்.