சுவாமிசரணம்! சுவாமிசரணம்!
நம்தெய்வமானசுவாமி ஐயப்பன்
வாழும்மலைசபரிமலை
ஐயப்பன் பக்தகோடிகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்
சபரிமலைக்குசெல்லும்போதுகவனிக்கவேண்டியவைகள்
1. நெகிழி (பிளாஸ்டிக்) மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்லாதீர்கள்.
2. உணவுப் பொட்டலங்கள், கைப்பை, இருமுடியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
3. தவிர்க்க முடியாத சுழ்நிலையில் எடுத்து சென்றால், அதை மீண்டும் நீங்களே திரும்பவும் எடுத்து வந்துவிடுங்கள்.
4. உணவுப் பொட்டலங்களை உணவுடன் வீசி எறியாதீர்கள். அந்த உணவுப் பொட்டலங்களை யானை மற்றும் சில விலங்குகள் உண்பதால், அதன் வயிற்று பகுதியில் சிக்கி இறந்து விடுகின்றன.
5. பம்பா நதியாம் புண்ணிய நதி , அந்த நதி ஐயப்பன் நீராடும் நதி. அந்த நதியை அசுத்தம் செய்யாதீர்கள்.
6. பம்பா நதியில் குளிக்கும்போது பழைய துணிகள், உங்கள் உடமைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகளை விட்டு செல்லாதீர்கள். அது பம்பா நதியை மாசுபடுத்துவது மட்டுமல்லாது, அந்த நீரை குடிக்கும் விலங்குகளுக்கும், நீரில் வாழும் மீன்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவைகள்.
7. சமைத்து சாப்பிடும் ஐயப்பன் பக்தர்கள் சமைத்து முடித்த பின்னர் பயன்படுத்திய விறகுகளை நீரை ஊற்றி அணைத்து விட்டு செல்லவும்.
8. சிறுநீர் மற்றும் மலம் கழிக்க அதற்காக கட்டப்பட்ட இடத்தை பயன்படுத்தவும். பம்பா நதியை சுற்றி அசுத்தம் செய்யாதீர்கள். இது நமக்கு மட்டுமல்லாது பலருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது.